குடியிருப்பு பகுதியில் புகுந்த மலைப்பாம்பு பிடிபட்டது

குடியிருப்பு பகுதியில் புகுந்த மலைப்பாம்பு பிடிபட்டது.
குடியிருப்பு பகுதியில் புகுந்த மலைப்பாம்பு பிடிபட்டது
Published on

இலுப்பூர் அருகே நெய்வாய்ப்பட்டி குடியிருப்பு பகுதியில் மலைப்பாம்பு புகுந்தது. இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த ரெங்கையா என்பவர் இலுப்பூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் முருகேசன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை லாவகமாக பிடித்து சாக்கு பையில் அடைத்தனர். பின்னர் பிடிபட்ட மலைப்பாம்பை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் நார்த்தாமலை காப்புகாட்டில் மலைப்பாம்பை விட்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com