குடியிருப்பு பகுதியில் புகுந்த மலைப்பாம்பு பிடிபட்டது

குடியிருப்பு பகுதியில் புகுந்த மலைப்பாம்பு பிடிபட்டது.
குடியிருப்பு பகுதியில் புகுந்த மலைப்பாம்பு பிடிபட்டது
Published on

இலுப்பூர் அருகே பொய்கால்பட்டியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி. இவரது குடியிருப்பு பகுதியில் மலைப்பாம்பு புகுந்து அச்சுறுத்துவதாக இலுப்பூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தார். தகவலின் பேரில் இலுப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் முருகேசன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து மலைப்பாம்பை உயிருடன் பிடித்து சாக்கு பையில் அடைத்தனர். பின்னர் பிடிபட்ட மலைப்பாம்பை தீயணைப்புதுறையினர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். பின்னர் வனத்துறையினர் நார்த்தாமலை காப்புகாட்டில் கொண்டு விட்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com