குடியிருப்பு பகுதியில் புகுந்த மலைப்பாம்பு பிடிபட்டது

குடியிருப்பு பகுதியில் புகுந்த மலைப்பாம்பு பிடிபட்டது.
குடியிருப்பு பகுதியில் புகுந்த மலைப்பாம்பு பிடிபட்டது
Published on

அன்னவாசல் அருகே மேலூரை சேர்ந்தவர் மனோகரன். இவரது குடியிருப்பு பகுதியில் மலைப்பாம்பு புகுந்து அச்சுறுத்துவதாக சிப்காட் தீயணைப்பு நிலையத்திற்கு அவர் தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் சிப்காட் தீயணைப்பு நிலைய அலுவலர் அப்துல்ரகுமான் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மலைப்பாம்பை லாவகமாக உயிருடன் பிடித்து சாக்கு பையில் அடைத்தனர். பின்னர் பிடிபட்ட மலைப்பாம்பை தீயணைப்புதுறையினர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். பின்னர் வனத்துறையினர் நார்த்தாமலை காப்புகாட்டில் மலைப்பாம்பை விட்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com