

கோத்தகிரி,
கோத்தகிரி அருகே கட்டபெட்டு வனச்சரகத்திற்கு உட்பட்ட நெடுகுளா கிராமத்தில் குடியிருப்புகளை ஒட்டி உள்ள தேயிலை தோட்டத்தில் நேற்று மலைப்பாம்பு ஒன்று படுத்துக் கிடப்பதை தொழிலாளர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் கட்டபெட்டு வனச்சரக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வனச்சரகர் செல்வகுமார் உத்தரவின் பேரில், வனக்காப்பாளர் குட்டன், வன காவலர் ராஜேஷ் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தேயிலை தோட்டத்தில் படுத்துக் கிடந்த 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை லாவகமாக பிடித்து மீட்டனர். பின்னர் அடர்ந்த வனப்பகுதிக்கு கொண்டு சென்று பாதுகாப்பாக விட்டனர்.