2 சிறுவர்களை கடித்து குதறிய வெறிநாய்; ஆஸ்பத்திரியை பொதுமக்கள் முற்றுகை

கடையநல்லூர் பகுதியில் 2 சிறுவர்களை வெறிநாய் கடித்து குதறியது. இதையடுத்து ஆஸ்பத்திரியை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
2 சிறுவர்களை கடித்து குதறிய வெறிநாய்; ஆஸ்பத்திரியை பொதுமக்கள் முற்றுகை
Published on

கடையநல்லூர்:

கடையநல்லூர் ரகுமானியாபுரம் 7-வது தெருவை சேர்ந்த சதாம் உசேன் மகன் முஹம்மத் இத்ரிஸ் (வயது 7). பேட்டை மேற்கு பகுதி அக்ஸா பள்ளிவாசல் தெருவை சேர்ந்த அப்துல்லா மகன் அஹமது (5). இந்த 2 சிறுவர்களும் நேற்று மாலை தங்களது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த வெறிநாய் அவர்களை கடித்து குதறியது. இதில் இருவரும் பலத்த காயம் அடைந்ததனர். இதனை பார்த்து பதறி துடித்த குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தினர் சிறுவர்களை மீட்டு கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அப்போது அங்கு போதிய மருத்துவர்கள் இல்லாததை அறிந்து முற்றுகையிட்டனர். அவர்களிடம் ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டனர். இதற்கிடையே அஹமது என்ற சிறுவன் மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டான். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

X

Daily Thanthi
www.dailythanthi.com