ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழ முயன்ற இளம்பெண்ணை காப்பாற்றிய ரெயில்வே பாதுகாப்பு படை வீரர் - வைரல் வீடியோ

ரெயிலில் ஏறுவதற்காக பயணிகள் முண்டியடித்து சென்றனர். சிறிது நேரத்தில் அந்த ரெயில் புறப்பட்டது.
ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழ முயன்ற இளம்பெண்ணை காப்பாற்றிய ரெயில்வே பாதுகாப்பு படை வீரர் - வைரல் வீடியோ
Published on

அரியலூர்,

அரியலூர் ரெயில் நிலையம் வழியாக நாள்தோறும் 15-க்கும் மேற்பட்ட ரெயில்கள் சென்று வருகின்றன. இதில், அரியலூர் மட்டுமின்றி பெரம்பலூர், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் இந்த ரெயில் நிலையத்திற்கு வந்து ரெயிலில் பயணம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று அதிகாலை 5 மணிக்கு விழுப்புரத்தில் இருந்து மெமு ரெயில் புறப்பட்டு சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. காலை 7 மணியளவில் அரியலூர் ரெயில் நிலையத்திற்கு வந்தது. அப்போது, ரெயிலில் ஏறுவதற்காக பயணிகள் முண்டியடித்து சென்றனர். சிறிது நேரத்தில் அந்த ரெயில் புறப்பட்டது.

அப்போது, 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் ஓடும் ரெயிலில் ஏற முயன்றார். ரெயில் படிக்கட்டு அருகே இருந்த கைப்பிடியை பிடித்து ஏறும்போது சறுக்கி தவறி விழ முயன்றார். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ரெயில்வே பாதுகாப்பு படை வீரர் செந்தில் அந்த இளம்பெண்ணை பிடித்து ரெயிலில் ஏற்றிவிட்டார். இதனால் அந்த பெண் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த அதிகாரிகளும், பொதுமக்களும் ரெயில்வே பாதுகாப்பு படை வீரர் செந்திலை பாராட்டி வருகின்றனர். ரெயில்வே பாதுகாப்பு படை வீரர் செந்தில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இதேபோல் ரெயிலில் இருந்து தவறி விழ முயன்ற பெண் ஒருவரை காப்பாற்றினார். அதேபோல், மீண்டும் ஒரு பயணியை காப்பாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Ariyalur Train CCTV | ரயில் ஏறும் போது தவறிய பெண் - நொடிப்பொழுதில் கடவுளாய் தோன்றிய காவலர்.. வெளியான சிசிடிவி காட்சி#Ariyalur | #Train | #CCTV | #ThanthiTV pic.twitter.com/K3rv9m5ZB4
— Thanthi TV (@ThanthiTV) January 29, 2026

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com