12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் அரிய நிகழ்வு: கூடலூரில் பூத்த நீலக்குறிஞ்சி பூ - சுற்றுலாப் பயணிகள் பரவசம் - வீடியோ

குறிஞ்சிப் பூ பூத்திருக்கும் தகவலை கேள்விப்பட்டவுடன் சுற்றுலாப் பயணிகள் குவியத் தொடங்கியிருக்கிறார்கள்.
கூடலூர்,
குறிஞ்சிப் பூ என்பது 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் என்று நாம் அனைவரும் கேள்விப்பட்டிருக்கிறோம். நீலக்குறிஞ்சி என்ற இந்த வகைப் பூ, நீலகிரி, கொடைக்கானல் உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் கேரள வனப்பகுதியில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும். ஸ்ட்ரோபிலாந்தஸ் குந்த்தியானா என்ற அறிவியல் பெயர் கொண்ட அரிய தாவரமான நீலக்குறிஞ்சி தற்போது கூடலூர் தாலுகா ஓவேலி வனப்பகுதியில் 12 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது பூத்திருக்கிறது. இதை வனத்துறையினர் கண்டுபிடித்து அரசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
குறிஞ்சி மலர்கள் பூத்துக்குலுங்கும்போது ஒட்டுமொத்த மலைப்பகுதியும் நீல நிறத்தில் தெரிவது கண்கொள்ளா காட்சியாக இருக்கும். தற்போது, குறிஞ்சிப் பூ பூத்திருக்கும் தகவலை கேள்விப்பட்டவுடன் சுற்றுலாப் பயணிகள் குவியத் தொடங்கியிருக்கிறார்கள். நீலக்குறிஞ்சி பூவைப் பார்த்து பரவசம் அடைந்த அவர்கள், தங்களுடைய செல்போனிலும் செல்பி புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.






