ஒரே நேரத்தில் சூரியன் மறைவு-சந்திரன் உதயம்: குமரியில் இன்று அபூர்வ காட்சி

அபூர்வ காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரே நேரத்தில் சூரியன் மறைவு-சந்திரன் உதயம்: குமரியில் இன்று அபூர்வ காட்சி
Published on

கன்னியாகுமரி,

சித்திரை மாதம் பவுர்ணமி நாளன்று சித்ரா பவுர்ணமி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் சூரியன் மறைவும், சந்திரன் உதயமாகும் காட்சியும் ஒரே நேரத்தில் கன்னியாகுமரியில் காணலாம். இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமி விழா இன்று (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி இன்று மாலை 6 மணிக்கு கன்னியாகுமரி கடலில் சூரியன் மறையும் போது சந்திரன் உதயமாகும். இவ்விரண்டு காட்சிகளும் ஒரே நேரத்தில் நிகழ்கிறது. இந்த அபூர்வ காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு வருகை தருவார்கள்.

இந்த அபூர்வ நிகழ்வு மாலையில் சூரியன் மேற்கு பகுதியில் உள்ள அரபிக்கடலில் பந்து போன்ற வடிவத்தில் கடலுக்குள் மறையும். அப்போது கிழக்கில் உள்ள வங்கக்கடல் பகுதியில் சந்திரன் வட்ட வடிவத்தில் ஒளி வெள்ளத்தில் காணப்படும். இந்த காட்சியை கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் கடற்கரை மற்றும் சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதி ஆகிய இடங்களில் இருந்து கண்டு ரசிக்கலாம். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com