ஓய்வு பெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சாவு

ஓய்வு பெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாடிப்படியில் இருந்து தவறி விழுந்து இறந்தார்,.
ஓய்வு பெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சாவு
Published on

திருச்சி மலையப்பநகர் பெரியார்தெருவை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 70). சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி மல்லிகா (55). இந்தநிலையில் கடந்த 26-ந்தேதி இரவு மாடிப்படியில் இருந்து தவறி விழுந்ததில் பழனிசாமி படுகாயம் அடைந்தார். உடனே வீட்டில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். ஆனால் வழியிலேயே பரிதாபமாக பழனிசாமி உயிரிழந்தார். இதுகுறித்து மல்லிகா கொடுத்த புகாரின் பேரில் அரியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com