சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: குற்றவாளி குறித்து தகவல் அளித்தால் ரூ.5 லட்சம் வெகுமதி

தகவல் அளிப்பவரின் அடையாளம் ரகசியமாக வைக்கப்படும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: குற்றவாளி குறித்து தகவல் அளித்தால் ரூ.5 லட்சம் வெகுமதி
Published on

சென்னை,

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கத்தில் பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அந்த சிறுமியை மர்ம ஒருவர் பின்தொடர்ந்து சென்று கடத்தி, பாலியல் வன்கொடுமை செய்யும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நபர் பற்றிய எந்த தகவலும் இது வரை கிடைக்காத நிலையில், சிசிடிவி கேமிராவில் பதிவான குற்றவாளியின் தெளிவான படத்தை தமிழக போலீசார் வெளியிட்டுள்ளனர். மேலும், அந்த மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சம்பவம் நடத்து பல நாட்கள் கடந்தும், குற்றவாளி பிடிபடாத நிலையில், அவனை பற்றி துப்பு கிடைத்தால் 99520 60948 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு கூறலாம் என்று தமிழக போலீசார் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளனர்.

மேலும், தேடப்படும் குற்றவாளியை பற்றி தகவல் தருபவர்களுக்கு ரூ. 5 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்றும் போலீசார் அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளனர். தகவல் தருபவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புடன், தேடப்படும் நபரின் போட்டோக்களையும் போலீசார் வெளியிட்டு உள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com