கூடைப்பந்து பயிற்சியில் ஈடுபட்டிருந்த பள்ளி மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

சிறுவன் தினமும் மாலை நேரத்தில் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் கூடைப்பந்து பயிற்சி பெற்று வந்தார்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

சென்னை,

சென்னையில், கூடைப்பந்து பயிற்சியில் ஈடுபட்டிருந்த 6-ம் வகுப்பு மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மயிலாப்பூரை சேர்ந்த தயாள் சுந்தரம் - கீதா தம்பதியின் மகன், தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார். சிறுவன் தினமும் மாலை நேரத்தில் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் கூடைப்பந்து பயிற்சி பெற்று வந்தார்.

இந்த நிலையில் சிறுவன் வழக்கம்போல கூடைப்பந்து பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக அங்கிருந்த மின்சார கம்பியை தொட்டதில், மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com