ஆதம்பாக்கத்தில் டிப்பர் லாரி மோதி பள்ளி மாணவி படுகாயம்

ஆதம்பாக்கத்தில் டிப்பர் லாரி மோதி பள்ளி மாணவி படுகாயம் அடைந்தார்.
ஆதம்பாக்கத்தில் டிப்பர் லாரி மோதி பள்ளி மாணவி படுகாயம்
Published on

சென்னையை அடுத்த நங்கநல்லூர் தில்லைகங்கா நகர் 13-வது தெருவை சேர்ந்தவர் கணேஷ்குமார் (வயது 32). இவர், ஆதம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படிக்கும் தனது அண்ணனின் 8 வயது மகளான ஸ்ரீமாயை, மோட்டார்சைக்கிளில் ஏற்றிக்கொண்டு ஆதம்பாக்கம் உள்வட்ட சாலை வழியாக சென்றார்.

அப்போது வேகமாக வந்த டிப்பர் லாரி, இவர்கள் சென்ற மோட்டார்சைக்கிளை உரசியபடி சென்றது. இதில் 2 பேரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர்.

இதில் மாணவி ஸ்ரீமாயின் இடுப்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. கணேஷ் குமாருக்கு இடதுகாலில் காயம் ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்துவந்த பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், படுகாயம் அடைந்த மாணவியை அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கு காரணமான டிப்பர் லாரி டிரைவரான கேளம்பாக்கம் பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணனை என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com