வாலிபரை அரிவாளால் வெட்டியவர் கைது

மானூர் அருகே வாலிபரை அரிவாளால் வெட்டியவரை போலீசார் கைது செய்தனர்.
வாலிபரை அரிவாளால் வெட்டியவர் கைது
Published on

மானூர்:

மானூர் அருகே ராமையன்பட்டி சிவாஜி நகரை சேர்ந்தவர் தீபன் ராஜ் (வயது 23). ஜேசிபி ஆபரேட்டர். இவரது அண்ணன் நேசமணி என்ற தினேசும், அதே ஊரைச் சேர்ந்த மாரியப்பன் மகன் இசக்கி பாண்டி (21) என்பவரும் நண்பர்கள். இவர்களுக்குள் செல்போன் எண்ணை தவறுதலாக கொடுத்தது தொடர்பாக விரோதம் ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று தீபன் ராஜூம், நேசமணியும் அவர்களது ஊர் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு அரிவாளுடன் வந்த இசக்கி பாண்டி அவர்களுடன் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனை தட்டிக்கேட்ட தீபன்ராஜை அரிவாளால் வெட்ட முயன்றார். அதை கையால் தடுத்தபோது, தீபன் ராஜூக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இசக்கி பாண்டியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com