வாலிபருக்கு அரிவாள் வெட்டு

நெல்லை சந்திப்பில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
வாலிபருக்கு அரிவாள் வெட்டு
Published on

நெல்லை சந்திப்பில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

வாலிபர்

நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறை கீழத்தெருவை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 24). இவர் நேற்று இரவில் தனது வீட்டு முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு கும்பல் இவரை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி சென்று விட்டனர்.

இதில் பலத்த காயம் அடைந்த பாஸ்கரை உடனே சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

காரணம் என்ன?

இதுபற்றி தகவல் அறிந்த நெல்லை உதவி போலீஸ் கமிஷனர் ராஜேஸ்வரன், சந்திப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்மோகன், நுண்ணறிவு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இவருக்கும் அந்த பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும் ஏற்கனவே முன் விரோதம் இருந்துள்ளது. அந்த முன் விரோதத்தில் இவர் அரிவாளால் வெட்டப்பட்டாரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். இதுதொடர்பாக சிலரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவத்தையடுத்து அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com