பாம்பன் பழைய தூக்குப்பாலத்தின் ஒரு பகுதி அகற்றம்

இன்னும் சில வாரங்களில் துாக்கு பாலம் முழுவதும் அகற்றப்படும் என ஊழியர்கள் தெரிவித்தனர்.
பாம்பன் பழைய தூக்குப்பாலத்தின் ஒரு பகுதி அகற்றம்
Published on

ராமநாதபுரம்,

பாம்பன் கடலில் 1914ல் அமைக்கப்பட்ட பாம்பன் ரயில் பாலத்தின் நடுவில் உள்ள துாக்கு பாலம் பலமிழந்ததால் 2022ல் அதன் வழியாக நடந்த ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதன் பின் புதிய ரயில் பாலம் அமைக்கப்பட்டு 2025 ஏப்., 6ல் ரயில் போக்குவரத்து துவங்கியது.

இதையடுத்து பழைய ரயில் துாக்கு பாலத்தை பராமரிப்பதில் சிக்கல் ஏற்பட்டதால் அகற்ற டெண்டர் விடப் பட்டது. தற்போது துாக்கு பாலத்தை அகற்றும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் தற்போது தூக்குப்பாலத்தின் ஒரு பகுதி வெட்டி அகற்றப்பட்டது. இன்னும் சில வாரங்களில் துாக்கு பாலம் முழுவதும் அகற்றப்படும் என ஊழியர்கள் தெரிவித்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com