அரசு பள்ளி மாணவர்களுக்கு சீர்வரிசை பொருட்கள்

அரசு பள்ளி மாணவர்களுக்கு சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன.
அரசு பள்ளி மாணவர்களுக்கு சீர்வரிசை பொருட்கள்
Published on

அருப்புக்கோட்டை, 

அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் கட்டங்குடியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி புதுப்பிக்கப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது. முன்னதாக ஊர் கிராம மக்கள் ஒன்று சேர்ந்து அவர்களுக்கு பள்ளிக்கு தேவையான இடு பொருட்களை பாரம்பரிய முறைப்படி சீர்வரிசை பொருட்களாக கொண்டு வந்தனர். கட்டங்குடி ஊராட்சி மன்ற தலைவர் மகாலட்சுமி முன்னிலையில் வட்டார வளர்ச்சி அலுவலர் சூரியகுமாரி புதிய பள்ளி கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தொடர்ந்து வேளாண் கல்லூரி மாணவிகளின் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இதில் செம்பட்டி, மலைப்பட்டி, வெள்ளையாபுரம் உள்பட ஊராட்சிகளை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஊர் பெரியவர்கள், கிராம பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஊராட்சி செயலாளர் ராஜாக்கனி செய்திருந்தார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com