காய்ச்சலுக்கு மந்திரம் போடுவதாக அழைத்து சென்று கொலை - ராணிப்பேட்டை அருகே அதிர்ச்சி சம்பவம்

ராணிப்பேட்டை அருகே தொழில் போட்டியால் ஒருவரை அடித்துக் கொலை செய்த சம்பவத்தில் சகோதரர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.
காய்ச்சலுக்கு மந்திரம் போடுவதாக அழைத்து சென்று கொலை - ராணிப்பேட்டை அருகே அதிர்ச்சி சம்பவம்
Published on

ராணிப்பேட்டை,

வாலாஜாபேட்டை பகுதியை சேர்ந்த நெசவுத் தொழிலாளியான சீனிவாசன் என்பவர், காய்ச்சலுக்கு மந்திரம் போடும் தொழிலையும் செய்து வந்தார். இதேபோல், அதே பகுதியை சேர்ந்த சகோதரர்களான பிரகாஷ் மற்றும் கிருஷ்ணா ஆகியோரும், நெசவுத் தொழிலையும், காய்ச்சலுக்கு மந்திரம் போடும் தொழிலையும் மேற்கொண்டு வந்துள்ளனர்.

ஆனால், சகோதரர்களான பிரகாஷ் மற்றும் கிருஷ்ணாவிற்கு தொழிலில் சரிவு ஏற்படவே, அதற்கு காரணம் சீனிவாசன் தான் என கோபத்தில் இருந்துள்ளனர். இந்த நிலையில், உடல்நிலை சரியில்லாமல் இருந்த சீனிவாசனை, காய்ச்சலுக்கு மந்திரம் போடுவதாக அழைத்துச் சென்ற சகோதரர்கள் இருவரும், அவரை சுத்தியால் தலையில் தாக்கியுள்ளனர்.

இதில் ரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்ட சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவத்தை கொலை வழக்காக பதிவு செய்த போலீசார், பிரகாஷ் மற்றும் கிருஷ்ணாவை கைது செய்தனர். இதனிடையே, கைதான சகோதரர்களின் வீட்டை மர்மநபர்கள் சூறையாடிய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com