உல்லாசமாக இருக்கும்போது வெடித்த மோதல்; ஆம்பளையா என்று கேட்டு அவமானப்படுத்திய மனைவி - கணவர் செய்த விபரீத சம்பவம்

கள்ளத்தொடர்பை கைவிடுமாறு தனலட்சுமியிடம் கூறியபோது, என்னிடம் அடிக்கடி ஆபாசமாக பேசி வந்தாள்.
உல்லாசமாக இருக்கும்போது வெடித்த மோதல்; ஆம்பளையா என்று கேட்டு அவமானப்படுத்திய மனைவி - கணவர் செய்த விபரீத சம்பவம்
Published on

கள்ளத்தொடர்பை கைவிடாமல் என்னை அவமானப்படுத்தியதால் மனைவியை கையை அறுத்து கொலை செய்தேன் என்று கைதான கணவன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

வேலூர்,

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே ராஜக்கல் கிராமம் கூத்தாண்டவர் நகரை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 48), கார் டிரைவர். இவரும். திண்டுக் கல் மாவட்டம் கணவாய்பட்டி கிராமத்தை சேர்ந்த தனலட்சுமி (36) என்பவ ரும் கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஹரித்ராஸ்ரீ (16), விஜயஸ்ரீ (13) ஆகிய 2 மகள்களும், பத்ரிநாராயணன் (5) என்ற மகனும் உள்ளனர். தனலட்சுமி பேரணாம்பட்டு டவுன் ஆமினா வீதியில் ஒரு வீட்டில் வீட்டு வேலை செய்து வந்தார். இந்த நிலையில் தனலட்சுமியை காணவில்லை என விஜயகுமார் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் கூறினார்.

மேலும் வீட்டில் துர்நாற்றம் வந்ததால் குடியாத்தம் போலீசார் நேற்று முன்தினம் விஜயகுமார் வீட்டில் சோதனை செய்தனர். இதில் வீட்டு சமையலறை பரணில் தனலட்சுமி அரிசி சாக்குபையில் கட்டி, 2 கைகளின் மணிக்கட்டுக ளின் நரம்புகள் அரிவாளால் அறுக்கப்பட்டு, கால்கள் இரண்டும் செல்போன் சார்ஜர் ஒயரால் கட்டப்பட்டு முகம் அழுகிய நிலையில் இறந்து கிடந்தார்.

வாலிபருடன் கள்ளத்தொடர்பு

பின்னர் போலீசார் விஜயகுமாரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் அளித்த பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-

தனலட்சுமிக்கு சின்னவரிக்கம் கிராமத்தை சேர்ந்த குமரேசன் (வயது 25) என்ற வாலிபருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டு அடிக்கடி அவரை சந்தித்து பேசி வந்தார். வீட்டு வேலைக்கு பேரணாம்பட்டிற்கு சென்றுவிட்டு 3 நாளைக்கு ஒருமுறை தான் வீட்டிற்கு வருவாள். நான் பிள்ளைகளுக்கு தினமும் சாப்பாடு செய்து கொடுத்து பள்ளிக்கு அனுப்பி வைத்து, வளர்த்து வந்தேன். கள்ளத்தொடர்பை கைவிடுமாறு தனலட்சுமியிடம் கூறியபோது, என்னிடம் அடிக்கடி ஆபாசமாக பேசி வந்தாள்.

நீ ஆம்பளையா

கடந்த 28-ந் தேதி தனலட்சுமியுடன் உல்லாசமாக ஈடுபட்டபோது என்னை பார்த்து நீ ஆம்பளையா என்று கேட்டு அவமானப்படுத்தியது எனக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. நேற்று முன்தினம் காலை மகள் ஹரித்ராஸ்ரீயை அணைக் கட்டு பள்ளி விடுதியில் விட்டு திரும்பி வரும்போது பள்ளிகொண்டாவில் ரோட்டு ஓரத்தில் அரிவாள் கத்தியை வாங்கி கொண்டு வீட்டில் மறைத்து வைத்தேன்.

கள்ளக்காதலுடன் சினிமா

அன்று இரவு 11 மணிக்கு தனலட்சுமி கள்ளக்காதலன் குமரேசனுடன் சினிமாவுக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்தார். அவரிடம். எங்கு சென்று இரவு நேரத்தில் வீட்டிற்கு வருகிறாய். செல்போனை ஏன் சுவிட்ச் ஆப் செய்துள்ளாய் என்று கேட்டபோது, தனலட்சுமி என் விருப்பம், எங்கேயாவது போவேன், வருவேன் நீ யார் கேட்பதற்கு என்று கூறினாள். இதனால் இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. மீண்டும் தனலட்சுமி என்னிடம், நீ ஆம்பளையா என கேட்டாள். குமரேசனும் நானும் உல்லாசமாக இருந்துவிட்டு வந்தோம். நீ சரியாக இல்லை என்றால் அதற்கு நானா பொறுப்பு என கேள்வி கேட்டு என்னை தொடர்ந்து அவமானப்படுத்தினார்.

இதில் ஆத்திரமடைந்த நான் வீட்டின் ஹாலில் தனலட்சுமியின் 2 கைகளை பிடித்து அரிவாளால் மணிக்கட்டில் வெட்டினேன். மேலும் அவர் சுவரில் இடித்து கொண்டு ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்தாள், பின்னர் தனலட்சுமி யின் கால்களை செல்போன் சார்ஜர் ஒயரால் கட்டினேன். முகத்தை டவல் மற்றும் துணியால் இறுக கட்டிவிட்டேன். நள்ளிரவு 11.30 மணியளவில் தனலட்சுமியை தூக்கி பரணில் போட்டுவிட்டு அதன்மேல் பழைய பொருட்கள், ஸ்பீக்கர் பாக்ஸ், கயிறு போன்றவற்றை வைத்தேன். ரத்தகறை படிந்த துணிகளை வீட்டின் மாடியில் போட்டு விட்டு அரிவாளை சமையலறையில் மறைத்து வைத்துவிட்டு இரவு 12 மணிக்கு பிள்ளைகளுடன் தூங்கினேன். மறுநாள் காலை சமை யல் செய்து சாப்பாடு கட்டி கொடுத்து மகன், மகளை பள்ளிக்கு அழைத்து சென்றுவிட்டு வந்தேன். பின்னர் அக்கம் பக்கத்தினரிடம் எனது மனைவியை காணவில்லை என்று கூறினேன்.

இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

இதனையடுத்து விஜயகுமாரை போலீசார் கைது செய்து குடியாத்தம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதனால் அவர்களது 3 குழந்தைகளின் வாழ்க்கை கேள்வி குறியாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com