கள்ளக்காதல் விவகாரத்தில் ஒருவருக்கு அரிவாள் வெட்டு

கள்ளக்காதல் விவகாரத்தில் ஒருவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
கள்ளக்காதல் விவகாரத்தில் ஒருவருக்கு அரிவாள் வெட்டு
Published on

புதுக்கோட்டை காந்திநகரை சேர்ந்தவர் பாலச்சந்திரன் (வயது 45). இவருக்கு திருமணமாகி மனைவியை பிரிந்து வசித்து வருகிறார். இந்த நிலையில் வேறு ஒரு பெண்ணுடன் கள்ளக்காதல் ஏற்பட்டதில், அந்த பெண்ணின் உறவினரான திருக்கட்டளையை சேர்ந்த பிரகாஷ் (21), புதுக்கோட்டையை சேர்ந்த பாலமுருகன் (42) ஆகியோர் சேர்ந்து பாலச்சந்திரனை அரிவாளால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்தனர்.

இது தொடர்பாக கணேஷ்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரகாஷ், பாலமுருகன் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com