ஓடும் கார் கண்ணாடியில் இருந்து வெளியே வந்த பாம்பு.!


ஓடும் கார் கண்ணாடியில் இருந்து வெளியே வந்த பாம்பு.!
x

பாம்பு ஒன்று காரின் பக்கவாட்டு கண்ணாடியில் இருந்து வெளியே வந்தது.

நாமக்கல்,

நாமக்கல்-சேலம் சாலையில் நேற்று கணவன்-மனைவி 2 பேரும் காரில் பயணம் செய்து கொண்டு இருந்தனர். புதுச்சத்திரம் அருகே சென்றபோது, கொம்பேறி மூக்கன் வகையை சேர்ந்த சிறிய பாம்பு ஒன்று காரின் பக்கவாட்டு கண்ணாடியில் இருந்து வெளியே வந்தது.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் காரை நிறுத்திவிட்டனர். பின்னர் தங்களது செல்போனில் வீடியோ எடுத்து அதனை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து உள்ளனர். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

1 More update

Next Story