விவசாயி வீட்டுக்குள் புகுந்த பாம்பு

நத்தம் அருகே விவசாயி வீட்டுக்குள் பாம்பு ஒன்று புகுந்தது.
விவசாயி வீட்டுக்குள் புகுந்த பாம்பு
Published on

நத்தம் அருகே உள்ள நடுவனூரை சேர்ந்தவர் அழகர்சாமி. விவசாயி. இவரது வீட்டுக்குள் பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றது. இதைக்கண்ட அழகர்சாமி அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து நத்தம் தீயணைப்பு நிலையத்துக்கு அவர் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் நிலைய அலுவலர் அம்சராஜன் தலைமையிலான தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் வீட்டுக்குள் பதுங்கி இருந்த 5 அடி நீள நல்ல பாம்பை பிடித்தனர். இதனையடுத்து அந்த பாம்பு, வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதனை, அடர்ந்த வனப்பகுதியில் வனத்துறையினர் விட்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com