விவசாயி வீட்டுக்குள் புகுந்த பாம்பு

குஜிலியம்பாறை அருகே விவசாயி வீட்டுக்குள் பாம்பு ஒன்று புகுந்தது.
விவசாயி வீட்டுக்குள் புகுந்த பாம்பு
Published on

குஜிலியம்பாறை அருகே உள்ள நாச்சிபட்டியை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 28). விவசாயி. இவருக்கு, அதே பகுதியில் தோட்டத்துடன் கூடிய வீடு ஒன்று உள்ளது. இந்நிலையில் இவரது தோட்டத்து வீட்டு வாசல் பகுதியில் பாம்பு ஒன்று புகுவதை கனகராஜ் பார்த்தார். இதுகுறித்து அவர், குஜிலியம்பாறை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் நிலைய அலுவலர் (பொறுப்பு) முனீஸ்வரன் தலைமையில் தீயணைப்பு படைவீரர்கள் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள், வீட்டு வாசல் அருகே பதுங்கி இருந்த சுமார் 6 அடி நீளமுள்ள சாரைப்பாம்பை பிடித்தனர். அதன்பிறகு அந்த பாம்பை, குஜிலியம்பாறை அருகே உள்ள வனப்பகுதியில் கொண்டு போய் விட்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com