போடி அருகே வீட்டுக்குள் புகுந்த பாம்பு

போடி அருகே வீட்டுக்குள் புகுந்த பாம்பு பிடிபட்டது.
போடி அருகே வீட்டுக்குள் புகுந்த பாம்பு
Published on

போடி அருகே உள்ள துரைராஜபுரம் காலனியை சேர்ந்தவர் சரவணகுமார். கூலித்தொழிலாளி. இவரது வீட்டுக்குள் நேற்று மாலை பாம்பு ஒன்று புகுந்தது. இதை சரவணகுமாரும், அவரது குடும்பத்தினருடன் அலறி அடித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறினர். பின்னர் இதுகுறித்து அவர்கள், போடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் பழனி தலைமையிலான தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, வீட்டுக்குள் பதுங்கியிருந்த 5 அடி நீள சாரை பாம்பை லாவகமாக பிடித்தனர். பின்னர் அந்த பாம்பை வனப்பகுதியில் கொண்டுபோய் விட்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com