வீட்டுக்குள் புகுந்த பாம்பு

நத்தத்தில், வீட்டுக்குள் புகுந்த பாம்பை தீயணைப்பு படையினர் பிடித்தனர்.
வீட்டுக்குள் புகுந்த பாம்பு
Published on

நத்தம் தர்பார் நகரை சேர்ந்தவர் கமலா (வயது 55). நேற்று இவரது வீட்டுக்குள் பாம்பு ஒன்று புகுந்தது. இதனைக்கண்ட கமலா அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து நத்தம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

பின்னர் வீட்டுக்குள் சுருண்டு கிடந்த பாம்பை லாவகமாக பிடித்தனர். அது 2 அடி நீளம் உள்ள கொடிய விஷம் கொண்ட கட்டுவிரியன் பாம்பு ஆகும். அந்த பாம்பு, அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டது. 

X

Daily Thanthi
www.dailythanthi.com