வீட்டுக்குள் புகுந்த பாம்பு

பாபாநாசம் அருகே வீட்டுக்குள் புகுந்த பாம்பை தீயணைப்பு துறையினர் பிடித்தனர்.
வீட்டுக்குள் புகுந்த பாம்பு
Published on

பாபநாசம்:

பாபநாசம் அருகே வங்காரம்பேட்டை தஞ்சை மெயின் சாலையில் வசித்து வருபவர் அரங்கராஜன் (வயது 55). இவரது வீட்டின் மின் இணைப்பு அறையில் 6 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு புகுந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அரங்கராஜன் உடனடியாக பாபநாசம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் இளங்கோவன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று சாரைப்பாம்பை பிடித்தனர். பின்னர் அந்த பாம்பை சாக்குப்பையில் போட்டு அருகில் உள்ள வனப்பகுதியில் விட்டனர்

X

Daily Thanthi
www.dailythanthi.com