வீட்டிற்குள் புகுந்த பாம்பு

போடியில் வீட்டிற்குள் புகுந்த பாம்பை தீயணைப்பு படையினர் பிடித்தனர்.
வீட்டிற்குள் புகுந்த பாம்பு
Published on

போடி அம்மாகுளம் புரோபோசர் காலனியை சேர்ந்தவர் சதக் அப்துல்லா. இவரது வீட்டுக்குள் நேற்று முன்தினம் இரவு பாம்பு ஒன்று புகுந்தது. இதை கண்ட அவர் உடனே போடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் பழனி தலைமையில் படை வீரர்கள் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் சுமார் அரை மணி நேரம் போராடி 6 அடி நீளமுள்ள சாரை பாம்பை பிடித்தனர். பின்னர் அந்த பாம்பை வனப்பகுதியில் கொண்டு போய்விட்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com