திண்டிவனம் சப்-இன்ஸ்பெக்டர் வீட்டுக்குள் பாம்பு புகுந்ததால் பரபரப்பு

திண்டிவனம் சப்-இன்ஸ்பெக்டர் வீட்டுக்குள் பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டிவனம் சப்-இன்ஸ்பெக்டர் வீட்டுக்குள் பாம்பு புகுந்ததால் பரபரப்பு
Published on

திண்டிவனம், 

திண்டிவனம் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் தமிழ்மணி. இவர் போலீஸ் நிலையம் அருகே போலீஸ் குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். சம்பவத்தன்று இவருடைய வீட்டுக்குள் 4 அடி நீளமுள்ள நல்ல பாம்பு ஒன்று புகுந்தது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த வீட்டில் இருந்தவர்கள் அலறியடித்தபடி வெளியே ஓடி வந்ததுடன், இதுபற்றி திண்டிவனம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் கதிர்வேல் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வீட்டுக்குள் புகுந்த பாம்பை லாவகமாக பிடித்து, தொலைவில் உள்ள வனப்பகுதியில் கொண்டு விட்டனர். இந்த சம்பவத்தால் போலீஸ் குடியிருப்பில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com