வீட்டுக்குள் புகுந்த பாம்பு பிடிபட்டது

வீட்டுக்குள் புகுந்த பாம்பு பிடிபட்டது
Published on

திருவாடானை, 

திருவாடானை தாலுகா பாரூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பூவலிங்கம். இவரது வீட்டில் இருந்த அண்டாவுக்குள் சுமார் 5 அடி நீளமுள்ள நல்ல பாம்பு ஒன்று எலியை பிடித்து கொண்டிருந்தது. அப்போது எலியின் சத்தம் கேட்டு பூவலிங்கத்தின் மனைவி சென்று பார்த்தார். உடனே நல்ல பாம்பு படம் எடுத்து தலையை தூக்கியுள்ளது. இதனைக் கண்டு அலறி கொண்டு வீட்டை விட்டு அவர் வெளியே ஓடி வந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு நிலைய அலுவலர் வீரபாண்டி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று நல்ல பாம்பை உயிருடன் பிடித்து வனப்பகுதிக்குள் விட்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com