உலக நன்மை வேண்டி சிறப்பு யாகம்

உலக நன்மை வேண்டி சிறப்பு யாகம் நடைபெற்றது.
உலக நன்மை வேண்டி சிறப்பு யாகம்
Published on

தாயில்பட்டி, 

வெம்பக்கோட்டை அருகே உள்ள துலுக்கன்குறிச்சி வாழைமர பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாதக்கிருத்திகையை முன்னிட்டு பாலசுப்பிரமணியருக்கு 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதையடுத்து குழந்தை வரம் வேண்டியும், மழை பெய்ய வேண்டியும், உலக மக்கள் நன்மைக்காக சிறப்பு யாகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதேபோல விஜயகரிசல்குளம் வழிவிடு பாலமுருகன் கோவிலில் மாதக்கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. 

X

Daily Thanthi
www.dailythanthi.com