ஆதிதிராவிடர், பழங்குடியினர் தொழில் முனைவோருக்காக சிறப்பு திட்டம்

ஆதிதிராவிடர், பழங்குடியினர் தொழில் முனைவோருக்காக சிறப்பு திட்டம்
ஆதிதிராவிடர், பழங்குடியினர் தொழில் முனைவோருக்காக சிறப்பு திட்டம்
Published on

தமிழக அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில் முனைவோருக்காக பிரத்யேக சிறப்பு திட்டமாக அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஆர்வமுள்ள புதிய தொழில் முனைவோர் முன்மொழியும், நேரடி வேளாண்மை தவிர்த்த உற்பத்தி, வணிகம் மற்றும் சேவை சார்ந்த தொழில் திட்டத்திற்கு கடனுதவி, மானியம் வழங்கி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பதாரர்களுக்கு கல்வித்தகுதி தேவையில்லை. வயது வரம்பு 18 முதல் 55 வயது வரை இருக்க வேண்டும்.

மொத்த திட்டத்தொகையில் 65 சதவீதம் வங்கி கடனாக பரிந்துரை செய்யப்பட்டு 35 சதவீதம் மானியம் வழங்கப்படும். சொந்த முதலீடு வேண்டியதில்லை. தொழில்முனைவோருக்கு சிறப்பு பயிற்சி, திறன் மேம்பாட்டு பயிற்சி புத்தாக்க நிறுவனம் மூலமாக வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற திட்ட அறிக்கை மற்றும் ஆவணங்களுடன் msmeonline.tn.gov.in என்ற தளத்தில் இணைய வழியாக விண்ணப்பிக்க வேண்டும். ஆர்வமுள்ள தொழில்முனைவோருக்கு தேவையான ஆலோசனைகள், வழிகாட்டுதல்கள், திட்ட அறிக்கை தயாரித்தல், விண்ணப்பித்தல் தொடர்பான அறிமுக விழா மாவட்ட கலெக்டர் தலைமையில் நாளை மாலை 3 மணியளவில் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. மேலும் விவரங்களை பொதுமேலாளர், மாவட்ட தொழில் மையம், ராமநாதபுரம் என்ற முகவரியில் நேரடியாக அணுகலாம்.

எனவே ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர் பிரிவினை சார்ந்த தொழில் முனைவோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com