4 குழந்தைகளுடன் தமிழகம் வந்த இலங்கை தமிழர் குடும்பம் தனுஷ்கோடி முகாமில் தஞ்சம்

இலங்கையிலிருந்து 4 குழந்தைகள் உட்பட 8 தமிழர்கள் படகு மூலம் தனுஷ்கோடியில் தஞ்சமடைந்தனர்.
4 குழந்தைகளுடன் தமிழகம் வந்த இலங்கை தமிழர் குடும்பம் தனுஷ்கோடி முகாமில் தஞ்சம்
Published on

தனுஷ்கோடி,

இலங்கையிலிருந்து 4 குழந்தைகள் உட்பட 8 தமிழர்கள் படகு மூலம் தனுஷ்கோடியில் தஞ்சமடைந்தனர்.

இலங்கை கிளிநொச்சியைச் சேர்ந்த சந்திரகுமார், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பிரபாகரன் ஆகிய இருவரது குடும்பத்தினர் தமிழகம் வந்துள்ளனர். தலைமன்னாரிலிருந்து பைபர் படகு மூலம் தனுஷ்கோடி வந்த 8 இலங்கைத் தமிழர்கள் ஆட்டோவில் ஏறி மண்டபம் மரைன் காவல் நிலையத்திற்கு சென்றனர்.

அங்கு மத்திய மாநில உளவுத்துறை அதிகாரிகள் எட்டு பேரிடம் விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து நான்கு குழந்தைகள் உட்பட எட்டு பேரும் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்பட உள்ளனர். இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு வந்தவர்கள் எண்ணிக்கை 149 ஆக உயர்ந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com