

சிவகாசி-விருதுநகர் மெயின்ரோட்டில் உள்ள திருத்தங்கல் சோதனை சாவடி அருகில் இருக்கும் மின் கம்பத்தில் பகல் நேரத்தில் மின்விளக்கு எரிகிறது. மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த கூறும் மின்வாரியம் தெருவிளக்குகளையும் பகல் நேரங்களில் எரியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என சமூத ஆர்வலர்கள் எதிர்பார்க்கிறார்கள்.