கடலூர் அருகே நண்பர்களுடன் குளிக்க சென்ற மாணவர் நீரில் மூழ்கி பலி போலீசார் விசாரணை

கடலூர் அருகே நண்பர்களுடன் குளிக்க சென்ற மாணவர் நீரில் மூழ்கி உயிழந்தா.
கடலூர் அருகே நண்பர்களுடன் குளிக்க சென்ற மாணவர் நீரில் மூழ்கி பலி போலீசார் விசாரணை
Published on

சிதம்பரம், 

கடலூர் அருகே உள்ள கம்பளிமேடு மெயின் ரோட்டை சேர்ந்தவர் பழனிவேல் மகன் சரத்குரு (வயது 17). இவர் திருப்பாதிரிப்புலியூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இந்நிலையில் சரத்குரு தனது நண்பர்கள் 5 பேருடன் நேற்று மதியம் திருச்சோபுரம் உப்பனாற்றில் குளிக்கச் சென்றுள்ளார். அங்கு குளித்துக் கொண்டிருக்கும் போது சரத்குரு, ஆழமான பகுதிக்கு சென்றதாக தெரிகிறது.

இதில் அவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த புதுச்சத்திரம் போலீசார் விரைந்து சென்று நீரில் மூழ்கி பலியான சரத்குரு உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com