தாய், பாட்டிக்கு பாலில் தூக்க மாத்திரை: இரவு நேரத்தில் காதலனை வீட்டுக்கு வரவழைத்து மாணவி உல்லாசம்; திடுக்கிடும் தகவல்

தனது காதலனை வீட்டுக்கு வரவழைத்து உல்லாசமாக இருந்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
தாய், பாட்டிக்கு பாலில் தூக்க மாத்திரை: இரவு நேரத்தில் காதலனை வீட்டுக்கு வரவழைத்து மாணவி உல்லாசம்; திடுக்கிடும் தகவல்
Published on

சென்னை:

சென்னை முகப்பேர் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவரும் மன்னார்குடியை சேர்ந்த வாலிபர் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் மன்னார்குடி வாலிபர் சிறுமியை அடிக்கடி சந்தித்து வந்துள்ளார். இது சிறுமியின் தாய் மற்றும் உறவினர்களுக்கு தெரியவந்ததை தொடர்ந்து அவர்கள் வாலிபரை தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் முகப்பேர் பகுதியில் பள்ளி ஒன்றின் அருகில் வைத்து சிறுமியின் காதலனை உறவினர் ஒருவர் பார்த்துள்ளார். அவர் அந்த வாலிபருடன் சண்டை போட்டு உள்ளார். இதுபற்றி தகவல் கிடைத்ததும் நொளம்பூர் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

பின்னர் வாலிபரையும், சிறுமியின் உறவினரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். போலீஸ் விசாரணையில் சிறுமியை இரவு நேரத்தில் சந்தித்து வாலிபர் உல்லாசமாக இருந்து வந்தது தெரியவந்தது.

தனது தாய், பாட்டியுடன் வசித்து வரும் சிறுமி இரவு நேரங்களில் இருவருக்கும் பாலில் தூக்க மாத்திரையை கலந்து கொடுத்து நன்றாக தூங்க வைத்திருப்பது தெரியவந்துள்ளது. இதன் பின்னர் தனது காதலனை வீட்டுக்கு வரவழைத்து உல்லாசமாக இருந்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

தூக்க மாத்திரைகளை காதலனே சிறுமிக்கு வாங்கி கொடுத்திருப்பதாகவும், செல்போன் உள்ளிட்ட பொருட்களை வாங்கி கெடுத்திருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர். இந்த மாத்திரைகளை வீட்டில் ஒரு பையில் போட்டு வைத்திருந்ததாக தெரிவித்த சிறுமியின் உறவினர்கள் அதுபற்றி மருந்து கடையில் கொண்டு போய் காண்பித்து கேட்டபோது தான் அவை தூக்க மாத்திரைகள் என்பது தெரியவந்தது எனவும் போலீசிடம் சிறுமியின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக சிறுமியின் காதலனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். சிறுமி மீது அவரது உறவினர்கள் சுமத்தியுள்ள இந்த குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் அதன் உண்மை தன்மை குறித்து முழுமையாக விசாரித்த பிறகே அடுத்தக்கட்ட நடவடிக்கையை எடுக்க முடியும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com