

கும்பகோணம்,
கும்பக்கோணத்தில் உள்ள பிரபல துணிக்கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. கடையின் இரண்டாம் தளத்தில் பற்றிய தீ கடை முழுவதும் பரவியது.
இதனை தொடர்ந்து, கடையில் இருந்த வாடிக்கையாளர்கள் உடனடியாக கடையை விட்டு வெளியேற்றப்பட்டனர். தீ விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைவாக வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தீ விபத்தில் யாருக்கும் பாதிப்பு இல்லை என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.