சென்னை பாரிமுனையில் உள்ள இந்தியன் வங்கியில் திடீர் தீ விபத்து

உயிர் பயத்தில் வங்கியில் இருந்த பொதுமக்கள் சிலர் ஜன்னல் வழியாக வெளியேறினர்.
சென்னை பாரிமுனையில் உள்ள இந்தியன் வங்கியில் திடீர் தீ விபத்து
Published on

சென்னை,

சென்னை பாரிமுனை ராஜாஜி சாலையில் உள்ள பழமையான கட்டிடம் ஒன்றில் இந்தியன் வங்கி தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. 7-க்கும் மேற்பட்ட தளங்கள் கொண்ட இந்த கட்டிடத்தில் புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக இரண்டு தளங்களில் மட்டுமே வங்கி செயல்பட்டு வந்தது.

இந்த நிலையில் இன்று 4-வது தளத்தில் கட்டுமான பணியாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தபோது திடீரென அங்கிருந்த துணி ஒன்றில் தீப்பிடித்து பரவியதாக கூறப்படுகிறது. திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது. உயிர் பயத்தில் வங்கியில் இருந்த பொதுமக்கள் சிலர் ஜன்னல் வழியாக வெளியேறினர்.

இந்த நிலையில் வங்கி ஊழியர்கள் மற்றும் காவலாளிகள் தீயை அணைத்தனர். பின்னர் தீ விபத்து குறித்து வடக்கு கடற்கரை போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து போலீசார், சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com