126 பயணிகளுடன் புறப்பட்ட விமானத்தில் திடீர் கோளாறு - சென்னையில் பரபரப்பு

விமானத்தில் ஏற்பட்ட இயந்திரக்கோளாறை விமானி உடனடியாக கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
சென்னை,
சென்னையில் இருந்து இலங்கைக்கு 126 பயணிகளுடன் இலங்கை ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட தயார் நிலையில் இருந்தது. இந்த விமானம் ஓடுபாதைக்கு கொண்டு வரப்பட்ட போது திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டிருப்பதை விமானி கண்டுபிடித்தார்.
இதனையடுத்து உடனடியாக இயந்திரக்கோளாறை சரி செய்யும் பணியில் பொறியியல் அதிகாரிகள் ஈடுபட்டனர். தொடர்ந்து இயந்திரக்கோளாறு சரி செய்யப்பட்டதை அடுத்து ஒன்றரை மணி நேரம் தாமதமாக விமானம் இலங்கைக்கு புறப்பட்டது.
விமானத்தில் ஏற்பட்ட இயந்திரக்கோளாறை விமானி உடனடியாக கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story






