மின்சார வயர்கள் உரசியதில் தீப்பிடித்த கரும்பு தோட்டம்

சத்திரப்பட்டி அருகே மின்சார வயர்கள் உரசியதில் கரும்பு தோட்டம் தீப்பிடித்தது.
மின்சார வயர்கள் உரசியதில் தீப்பிடித்த கரும்பு தோட்டம்
Published on

சத்திரப்பட்டி அருகே உள்ள விருப்பாட்சி பெருமாள்குளம் பகுதியை சேர்ந்தவர் ரவி பாரதி (வயது 58). விவசாயி. இவர், சுமார் 5 ஏக்கர் நிலத்தில் கரும்பு பயிரிட்டு இருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை அந்த பகுதியில் பலத்த காற்று வீசியது. அப்போது நிலத்தின் மேற்பகுதியில் சென்ற 2 மின்சார வயர்கள் ஒன்றுடன் ஒன்று உரசியதாக கூறப்படுகிறது.

இதில் ஏற்பட்ட தீப்பொறிகள் கரும்புத் தோட்டத்தில் விழுந்தது. சிறிதுநேரத்தில் கரும்பு தோகை தீப்பற்றி எரிய தொடங்கியது. அந்த தீ மளமளவென பரவியது. இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் சுமார் மணி நேரம் போராடி கரும்பு தோட்டத்தில் எரிந்த தீயை தண்ணீர் ஊற்றி ரவிபாரதி அணைத்தார். இந்த தீ விபத்தில் கரும்புகள் கருகி சேதமடைந்தன. இதுகுறித்து தகவல் அறிந்த ஒட்டன்சத்திரம் தாசில்தார் முத்துச்சாமி தலைமையிலான வருவாய்த்துறையினர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com