

சென்னை,
தமிழக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
திருந்தாத திமுக! வருந்தாத உதயநிதி!
இல்லாத திராவிடத்தின் பெயரால் தமிழக மக்களை பிரித்தாளும் சூழ்ச்சிக்கு இரையாக்கி அரசியல் ஆதாயம் பெற்று வந்த திமுக..!!
ஆட்சி அதிகாரத்தை இழந்த விரக்தியில் மீண்டும், மீண்டும் இந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில் பேசி வருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
உதயநிதி ஸ்டாலின் எதிர்கட்சி தலைவராக சட்டமன்றத்தில் பதவியேற்ற போது தனது உரையில் சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என பேசி இருப்பது தேர்தலுக்குப் பின் திமுக மீண்டும் இந்து மத துவேஷத்தை தொடங்கி இருக்கிறது என்பதை நம் அனைவராலும் உணர முடிகிறது.
திருப்பரங்குன்றம் தொடங்கி சட்டமன்றம் வரை திமுகவின் இந்து விரோத பேச்சும், செயல்பாடும் இன்று வரை தொடர்கிறது.
திமுக தங்களுக்கு செய்த துரோகங்களுக்கும், அநீதிகளுக்கும் பாடம் கற்பிக்கும் வகையில் தமிழக மக்கள் திமுகவை ஆட்சி அதிகாரத்தில் இருந்து அகற்றிய பிறகும் அதே தவறை மீண்டும் மீண்டும் திமுக தொடர்ந்து செய்கிறது என்றால் இந்து விரோதமும், குரோதமும் திமுகவின் ரத்தத்திலேயே கலந்த ஒன்று என்பதை தமிழக மக்கள் நன்றாக உணர வேண்டும்.
இறை நம்பிக்கையுள்ள இந்துக்கள் எவரும் இனி திமுகவில் உறுப்பினராக இருக்கக்கூடாது.
திமுக உறுப்பினர்களில் நெற்றியில் திருநீறு, குங்குமம் வைக்கின்ற இந்துக்கள் திமுகவை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும்.
திமுகவின் வீழ்ச்சியிலே தான் தமிழகத்திற்கான வளர்ச்சியே இருக்கிறது.
துன்பங்கள் இல்லாமல் தமிழர்கள் நிம்மதியாக வாழ வேண்டுமானால்...
திராவிடம் இல்லாத தமிழகம் உருவாக வேண்டும்..!!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.