கருப்பு பூஞ்சை நோய்க்கு மாற்று சிகிச்சையை கண்டறிய 13 மருத்துவ வல்லுனர்கள் அடங்கிய குழு அமைப்பு - அமைச்சர் மா.சுப்பிரமணியன

கருப்பு பூஞ்சை நோய்க்கு மாற்று சிகிச்சையை கண்டறிய 13 மருத்துவ வல்லுனர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு உள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி அளித்தார்.
கருப்பு பூஞ்சை நோய்க்கு மாற்று சிகிச்சையை கண்டறிய 13 மருத்துவ வல்லுனர்கள் அடங்கிய குழு அமைப்பு - அமைச்சர் மா.சுப்பிரமணியன
Published on

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் ஊட்டி தமிழகம் மாளிகையில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமை தாங்கி பேசினார். கூட்டத்தில் வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், மக்கள் நல்வாழ்வு துறை முதன்மை செயலர் ராதாகிருஷ்ணன், கலெக்டர் இன்னசென்ட் திவ்யா மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்துக்கு பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-

தமிழகத்தில் ஒரு நாள் ஆக்சிஜன் தேவை 500 மெட்ரிக் டன். 660 மெட்ரிக் டன் ஆக்சிஜன் இருக்கிறது. 921 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். கருப்பு பூஞ்சை தொற்று எவ்வாறு ஏற்படுகிறது, இதற்கு மாற்று சிகிச்சை, மாற்று மருந்து ஏதேனும் உள்ளதா போன்ற விவரங்களை அறிய 13 மருத்துவ வல்லுனர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு உள்ளது. குழு ஆராய்ந்த பின்னர் அறிக்கை முதல்-அமைச்சரிடம் சமர்ப்பிக்கப்படும். 30,000 தடுப்பு மருந்து கேட்கப்பட்டு, 1,790 மருந்து வந்து உள்ளது.

ஒரு மாதத்தில் கொரோனா பாதித்தவர்களுக்கு சித்தா, ஹோமியோபதி, யுனானி, ஆயுர்வேதம், யோகா என 62 மையங்களில் இந்திய மருத்துவ முறை சிகிச்சை வசதி தொடங்கப்பட்டு உள்ளது. ஆய்வு பணிக்கு செல்லும் போது தனியார் மருத்துவமனைகளில் திடீரென ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. நீலகிரியில் கொரோனா பாதித்தவர்கள் வயநாட்டில் உள்ள மருத்துவமனையில் முதல்-அமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் 68 பேர் பயனடைந்தனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com