கல்லூரி மாணவியை வாலிபர் தாக்கியதால் பரபரப்பு

நெல்லை சந்திப்பில் கல்லூரி மாணவியை வாலிபர் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கல்லூரி மாணவியை வாலிபர் தாக்கியதால் பரபரப்பு
Published on

நெல்லை சந்திப்பில் பஸ்நிலையம் திறக்கப்படாவிட்டாலும், அதனை சுற்றிலும் தற்போது டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் காலை மற்றும் மாலை நேரத்தில் மாணவ-மாணவிகள், பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. இந்த நிலையில் நேற்று மாலை ஒரு கல்லூரி மாணவியை திடீரென்று மற்றொரு மாணவர் தாக்கினார். அவருக்கு ஆதரவாக 2 மாணவர்கள் செயல்பட்டு உள்ளனர்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் 3 மாணவர்களையும் மடக்கிப்பிடித்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரித்தனர். இதில் அந்த மாணவியின் சகோதரர் தாக்கியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் சந்திப்பு பஸ் நிலைய பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com