பங்கு சந்தையில் பணத்தை இழந்த வாலிபர் தற்கொலை

பங்கு சந்தையில் பணத்தை இழந்ததால் வாலிபர் தற்கொலை செய்துகொண்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
பங்கு சந்தையில் பணத்தை இழந்த வாலிபர் தற்கொலை
Published on

சேலம்,

சேலம் கருங்கல்பட்டி பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் ரகுநாத் (வயது 29). இவர், பங்கு சந்தை தொடர்பான வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி ஐஸ்வர்யலட்சுமி. இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஏற்கனவே ஒரு குழந்தை உள்ளது.

கடந்த 12-ந் தேதி ஐஸ்வர்ய லட்சுமிக்கு மீண்டும் ஒரு குழந்தை பிறந்தது. எனவே அவர் மருத்துவமனையில் உள்ளார். நேற்று முன்தினம் கார்த்திக் ரகுநாத் மருத்துவமனைக்கு சென்று குழந்தையை பார்த்து விட்டு வீடு திரும்பினார். பின்னர் அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், கார்த்திக் ரகுநாத் பங்கு சந்தையில் பணத்தை இழந்ததாகவும், எனவே பலரிடம் கடன் வாங்கி இருந்ததாகவும் தெரிகிறது. மேலும் தனது தந்தை தனசேகரனிடம், வீட்டை விற்று பணம் தரும்படியும் கேட்டு வந்துள்ளார். அதற்கு தந்தை மறுப்பு தெரிவிக்கவே அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. பங்கு சந்தையில் பணத்தை இழந்ததால் கடன் அதிகமாகி வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சூரமங்கலம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com