பல்லாவரம் அருகே ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை

பல்லாவரம் அருகே ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
பல்லாவரம் அருகே ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை
Published on

சென்னையை அடுத்த பல்லாவரம்-திரிசூலம் ரெயில் நிலையங்களுக்கு இடையே 30 வயது மதிக்கத்தக்க வாலிபர், ரெயிலில் அடிபட்டு உடல் சிதறி இறந்து கிடப்பதாக தாம்பரம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று வாலிபரின் உடலை பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

விசாரணையில் பலியானவர் புதுச்சேரியை சேர்ந்த அஸ்வின் சக்கரவர்த்தி (வயது 30) என்பதும், கடன் தொல்லையால் வீட்டை விட்டு வெளியேறிய அவர் சென்னையில் தங்கி வேலை செய்ததும் தெரிந்தது. ஆனால் அவர் எங்கு தங்கி, என்ன வேலை செய்தார்? என்பது தெரியவில்லை.

இவரை காணவில்லை என காரைக்கால் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டு இருப்பதும் தெரிந்தது. கடன் தொல்லையால் அஸ்வின் சக்கரவர்த்தி, ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com