ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலி

ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து வாலிபர் உயிரிழந்தார்.
ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலி
Published on

இறந்து கிடந்தார்

திருச்சி-கரூர் ரெயில்வே மார்க்கத்தில் எலமனூர் ரெயில் நிலையம் அருகே நேற்று காலை 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ரெயிலில் இருந்து தவறி விழுந்து காயம் அடைந்த நிலையில் இறந்து கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த திருச்சி ரெயில்வே போலீசார் அங்கு சென்று இறந்து கிடந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர் என்பது உடனடியாக தெரியவில்லை. மேலும் அந்த வாலிபர், ஸ்ரீரங்கத்தில் இருந்து திருப்பூருக்கு செல்ல முன்பதிவில்லா டிக்கெட் எடுத்துள்ளார்.

போலீசார் விசாரணை

மங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்யும்போது, படிக்கட்டில் இருந்து அவர் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com