புலியூத்து அருவியில் தவறி விழுந்து வாலிபர் சாவு

போடி அருகே அருவியில் தவறி விழுந்து வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
புலியூத்து அருவியில் தவறி விழுந்து வாலிபர் சாவு
Published on

போடி அருகே புலியூத்து அருவி உள்ளது.  அருவி பகுதியில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தார். இதுகுறித்து அப்பகுதி மக்கள், குரங்கணி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு வந்து வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக போடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. மேலும் அவர் அருவியில் குளிக்கும்போது தவறி விழுந்து இறந்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது. உடல் தோற்றத்தை வைத்து பார்க்கும் போது அவர், வெளிமாநிலத்தை சேர்ந்தவராக இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com