விபத்தில் வாலிபர் பலி

திருவண்ணாமலை அருகே விபத்தில் வாலிபர் உயிரிழந்தார்.
விபத்தில் வாலிபர் பலி
Published on

திருவண்ணாமலை அருகில் உள்ள ஆலத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 23). இவர், திருவண்ணாமலை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது ஆலத்தூர் ஏரிக்கரையோரம் நின்றிருந்த வாலிபர் மீது மோட்டார் சைக்கிள் மோதியது.

இதில் பிரபாகரனுக்கும், வாலிபருக்கும் படுகாயம் ஏற்பட்டது. உடனே அந்த பகுதியில் இருந்தவர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பிரபாகரன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் திருவண்ணாமலை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com