திருக்கோவிலூர் அருகேமோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் சாவு

திருக்கோவிலூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பலத்த காயமடைந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
திருக்கோவிலூர் அருகேமோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் சாவு
Published on

திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் அருகே உள்ள புதுவேங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் நீலகண்டன் மகன் தமிழ்மணி (வயது 22). இவர் சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் செட்டித்தாங்கல் கிராமம் வழியாக சொந்த ஊருக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது செட்டித்தாங்கல் டாஸ்மாக் கடையில் இருந்து மெயின் ரோட்டுக்கு வந்த மோட்டார் சைக்கிள் தமிழ்மணி ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த தமிழ்மணியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவரது உடல்நிலை மேலும் மோசமானதால் மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே தமிழ்மணி பரிதாபமாக இறந்து போனார். இதுகுறித்து திருக்கோவிலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் அன்பழகன் மற்றும் ரவி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com