மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி

கொல்லங்கோடு அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி
மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி
Published on

கொல்லங்கோடு, 

கேரள மாநிலம் பாறசாலை அருகே உள்ள இஞ்சிவிளை நடுதோட்டம் பகுதியை சேர்ந்தவர் ஜெய்லானி. இவருடைய மகன் கெனீப் (வயது 28). இவர் நேற்று அதிகாலை களியக்காவிளையில் இருந்து ஊரம்பு நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். சங்குருட்டி பகுதியை சென்றடைந்த போது போலீஸ் சார்பில் வைக்கப்பட்ட பேரிகார்டில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அவருடைய தலையில் படுகாயம் ஏற்பட்டது.

உடனே அவரை அக்கம் பக்கத்தை சேர்ந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பாறசாலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் கொல்லங்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com