மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி

நாங்குநேரி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் இறந்தார்.
மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி
Published on

நாங்குநேரி:

நாங்குநேரி அருகே உள்ள ஜெகநாதபுரத்தைச் சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 18). கொத்தனார் மற்றும் மேளம் அடிக்கும் தொழிலாளி.

பொங்கலன்று இரவு மூலைக்கரைப்பட்டி காக்கைகுளம் ரோட்டில் மோட்டார் சைக்கிளில் வரும்போது எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி கீழே விழுந்தார். உடனடியாக நாங்குநேரி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்து பின்னர் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் தங்கராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com