டிரான்ஸ்பார்மரில் ஏறி கோளாறை சரி செய்ய முயன்ற வாலிபர் கருகி சாவு

தானிப்பாடி அருகே வயலில் மின் மாட்டார் இயங்காததால் சட்டவிரோதமாக டிரான்ஸ்பார்மரில் ஏறி கோளாறை சரி செய்ய முயன்றவர் உடல் கருகி பலியானார்.
டிரான்ஸ்பார்மரில் ஏறி கோளாறை சரி செய்ய முயன்ற வாலிபர் கருகி சாவு
Published on

தண்டராம்பட்டு

தானிப்பாடி அருகே வயலில் மின் மாட்டார் இயங்காததால் சட்டவிரோதமாக டிரான்ஸ்பார்மரில் ஏறி கோளாறை சரி செய்ய முயன்றவர் உடல் கருகி பலியானார்.

இயங்காத மின்மோட்டார்

தண்டராம்பட்டு அருகில் உள்ள தானிப்பாடியை அடுத்த ரெட்டியார் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி-பாஞ்சாலை தம்பதியின் மகன் இளையராஜா (வயது 23).

இவர் மலமஞ்சனூரில் உள்ள தனது பாட்டி கோவிந்தம்மாள் வீட்டிற்கு சென்றிருந்தார். அங்கு சரவணன் என்பவர் நிலத்தில் மரவள்ளி கிழங்கு குச்சி நடுவதற்காக கூலி வேலைக்கு சென்றுள்ளார். வேலை முடிந்ததும் அங்குள்ள பம்புசெட்டில் குளிப்பதற்காக மின்மோட்டாரை ஆன் செய்வதற்கு சுவிட்சை போட்டார்.

ஆனால் மின் மோட்டார் இயங்கவில்லை. இதனால் அருகில் உள்ள டிரான்ஸ்பார்மரில் கோளாறு இருக்கும். அதனை சரி செய்தால் மின்மோட்டார் இயங்கும் என இளையராஜா நினைத்தார்.

சட்டவிரோதம்

ஆனால் டிரான்ஸ்பார்மர், மின்கம்பங்களில் மின்ஊழியர்கள்தான் ஏற அனுமதி உள்ளது. அவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை செய்து விட்டு கோளாறை சரி செய்யும் பணியில் ஈடுபடுவர். அவர்களை தவிர வேறு யாரும் தன்னிச்சையாக மின்கம்பத்திலோ அல்லது டிரான்ஸ்பார்மரிலோ ஏறுவது சட்டவிரோதம் ஆகும்.

இந்த நிலையில் சட்ட விரோதமாக இளையராஜா, மின் இணைப்பை ஆப் செய்து விட்டு டிரான்ஸ்பார்மரில் ஏறினார்.

அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் இளையராஜா டிரான்ஸ்பார்மரில் கருகி இறந்தார். அவரது உடல் டிரான்ஸ்பார்மரிலேயே தொங்கியது.

அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து உடனடியாக தானிப்பாடி மின்சார அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த மின்சார வாரிய ஊழியர்கள் மற்றும் போலீசார் டிரான்ஸ்பார்மருக்கு வரும் மின்சாரத்தை துண்டித்து விட்டு இளையராஜாவின் உடலை கீழே இறக்கினர்.

பிரேத பரிசோதனை

பின்னர் பிரேத பரிசோதனைக்காக உடலை திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக தானிப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இனி இதுபோன்று யாராவது மின்கம்பத்தில் ஏறினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com